மெய்யாகும் சூழ்.

வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கையும் துரோகமும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது உனது எனது பேதமில்லை ஒன்றிலிருந்து ஒன்றாக ஒவ்வொருவரிடமும் பின்னப்பட்டிருக்கும் நிர்பந்தங்கள் எப்பொழுது அவிழ கூடும் . காண்கின்ற எல்லாவற்றிலும் கேள்விகளும் பதில்களும் இவையாகவே தொற்றி கொண்டிருக்கிறது . இது வரை தோன்றிடாத எண்ணங்களில் அடங்கி இருப்பவையாக கருதப்படும் அதன் இயக்கங்கள் யாவற்றிலும் நம் இப்பொழுதைய சிந்தனைகள் கொஞ்சமேனும் அடித்தளமிட்டு பரிகாசித்து கொண்டிருக்கும் . கூற்றின் அறம் பொய்க்குமாயின் தவறின் கொள்கைகள் நியாயப்படுத்த காரணங்கள் எளிதாக கிடைத்து விடுகிறது சூழ்ந்து இருக்கும் நிலை கூட அவ்வாறே தோற்றமளித்து கொண்டிருக்கிறது இன்றளவும் . செய்து கொண்டிருப்பவை அனைத்தும் அகத்தின் மெய்யை உரமேற்று கொண்டிருப்பவை ஒளிகளின் பார்வையை அதன் நிழல் கொண்டு வழிப்பட்டு வந்தவை ஒளியாகவே உணரும் காலத்தின் சூழ் மெய்யாகும் . ...