தம்பியின் பிறந்த நாளுக்கு ..

வீட்டின் நிறைவு கொண்ட மகிழ்வின் பிறப்பிடம் எங்கள் தம்பியிடம் இருந்து பிறந்தது . இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் . என் அண்ணனுக்கு நான் மகிழ்வை அளித்தேனோ இல்லையோ தம்பி பாலாஜி இரு அண்ணன்களுக்கும் மகிழ்வை அளித்து கொண்டிருக்கிறான் . எங்கள் வீட்டின் மூன்றாம் குழந்தை என் தம்பி செல்லப்பிள்ளையாக எப்பொழுதும் இருப்பவன் . நினைவின் தொகுப்புகள் அலசப்படுகிறது அதில் தெரியும் எண்ண அலைகள் மகிழ்வின் மொத்த இனிமையை சார்ந்தது . வீட்டின் மொத்த அதிகாரத்தை இவன் குரலில் இன்னுமும் இசைத்து கொண்டிருக்கிறது எங்கள் வீடு . சில நிகழ்வை அவன் நினைவில் வைத்திருப்பனோ இல்லையோ என் அன்பின் வழியது அந்நினைவுகள் . மூன்று இல்லை நான்கு வயதிருக்கும் கடைத்தெருவுக்கு சென்று வரும் வழியில் பால்க்காரன் ஒருவர்...