இரவி மேட்ச் ஒர்க்ஸ்
இயற்றி விட்ட காலத்தினை நினைவுகளால் அளவிடும் தலைமுறையில் இருந்து ஒருவன் . வளத்தூரில் வாழ்வியல் ஆதாரமாக முன்பு வீற்றிருந்த இரவி மேட்ச் ஒர்க்ஸ் உழைப்பவர்களுக்கு உறைவிடமாகவும் உறுதுணையாகவும் இருந்த காலமொன்று உண்டு . எங்கள் வீட்டு அடுப்பினை பாஸ்பரஸ் மீது செய்யப்பட்டது . தீப்பெட்டி சட்டம் அடுக்கிய நேரத்திலும் கலங்கியதில்லை ஆயாவும் அம்மாவும் . அப்பாவின் ஆற்காடு வேலையை நினைவுப்படுத்த கடிதமும் மணி ஆர்டரும் மாதங்களை கரைத்தன . இரவி மேட்ச் ஒர்க்ஸின் எங்கள் மூவரின் முதல் உழைப்பின் சம்பளம் கொஞ்சம் உண்டியலில் கொஞ்சம் ஆயா ,அம்மாவிடம் மீதி கிளிமூக்கு பாய் கடையில் இருக்கும் பொம்மை சாமான்களின் மீது இன்னும் சிதறிக்கிடக்கிறது .. பசியெடுத்த நாட்களில் உழைப்பே உணவானது இன்றோ என் சோம்பலே உணவாகிறது எனக்கு . வளத்தூரின் பெரும்பான்மையான வாழ்விற்கு வழி காட்டியது இரவ...