இரவின் எண்ண போர்வை
தொலைத்தூர இருண்மை பிடிக்க என் நிழல் உண்டானதாக பொய்மையை உரைத்தது என் சுய ஒளி. நம்புவதற்கு என்றே இருக்கிறது என் சூழ்நிலையும். அந் நிழலை ஒழிப்பது என்று நேற்றைய இரவில் முடிவு செய்தாகி விட்டது . இப்பொழுதைய ஒரே ஒரு ஆறுதல் அத்தகைய இரவு வர வேண்டும் என்பதே . நொடிகளை அலட்சியப்படுத்தி சிதைத்து கொண்டிருக்கும் மவுனமும் இரவை நோக்குகிறது . இதற்கும் தனிப்பட்ட பகை இருக்க கூடும் அவை இரவினை கொடுர புன்னகையையுடன் வரவேற்க காத்திருக்கிறது . இரவின் மீதும் அதன் நிழல் மீதும் கொண்டுள்ள எண்ண போர்வையை பெரிதும் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் அதனை இல்லாமல் செய்து விட ஒரே வழி இரவினை வராமல் செய்து விடுவது தான் . அப்படிப்பட்ட இரவை இப்பொழுதே பிரபஞ்சம் உருவாக்குகிறது அதன் இயக்கத்தில் இப்பொழுதைய உலகில் தோன்றிய தோன்றுகின்ற தோன்றும் அனைத்து இரவுகளும் காலத்தினால் செய்யப்பட்ட என் சுய ஒளியானது . ...