எல்லாமுமான என் சரோஜாம்மா

எல்லாமுமான என் சரோஜாம்மா விடியலின் தேடும் ஒளியாய் நாளும் வழிகாட்டும் உந்தன் நேசமும் கவனிப்பும் கனிந்து உள்ளமெங்கும் நிறைகிறாய். இறுதி நாட்களின் விடிய விடிய பேச்சும் உன் மடியில் உறங்கி கொண்டே பேசியவை என் இரவெங்கும் ஒலிக்கிறது .. மாற்றிய வாழ்வை உனதாக்கி கொண்டாய் உன் உறவின் கணத்தலில் மனமும் நீர்மமாகிறது இன்று வரை என்னை புரிந்து கொண்டவை அனைத்தும் உன்னுள்ளே உறங்கி கொண்டிருக்கிறது யாருமே இனி அதை அறியப்போவதில்லை . என் எல்லாவற்றிலும் பகிர்வு உன்னுடனே இப்பொழுது கேட்பதற்கு யாரும் இல்லாததால் பகிர்வதற்கு நிறைய இருக்கிறது தவிக்க விட்டு போன உன்னை துயரத்தை கண்ணிர் விட்டு போக்குகிறேன். சொல்லிய விதம் நிரூபணம் செய்தாய் மரணத்தை ஏந்தி கொண்டு . இறப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னால் கூட பேசியதை என் உயிரில் கலக்க வைத்தாய். சென்ற வாரத்தில் உனக்கு வருட சடங்கு நடத்தினோம் நீ அறிந்தாயோ இல்லையோ அனைவரும் ஒன்று கூடினோம் அக்கணத்தில் நீ கூற நினைத்ததை நம் குடும்ப உறவுகள் யாரேனு...