ஒரு வீடு

முன்னெப்பொழுதும் இல்லாத மவுனத்தை கொண்டிருக்கிறது ஒரு வீடு . சுவர்களின் சுண்ணாம்பு விரிசல்கள் தனி தனி ஓவியமாகவே வீட்டின் வரலாறை சொல்கிறது . பல நூற்றாண்டின் சுவாசம் படிமமாக உறைந்து போயிருக்கிறது . யாதுமற்ற ஒரு வீடு வலியின் இருப்பை இன்றும் விட்டு வைக்கவில்லை. காட்சிப்படுத்தும் நிகழ்வு ஒளியின் சேர்ப்பு மட்டுமே காலத்தை உணர செய்ய கூடுமானவரை ஊரில் ஒரு வீடு இது போல் அமைந்து விடுகிறது . ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் பொழுது காணும் சிதிலமடைந்த ஒரு வீடு வன்மத்தை மற்ற வீடுகளுக்கு தன் எல்லையை பரப்பி கொள்கிறது . -தி .ராஜேஷ் .