எல்லாமுமாக என்னுள் நிறைந்த என் ஆயா சரோஜம்மா

என் சரோஜம்மா எல்லாமுமாக என்னுள் நிறைந்த என் ஆயா என்னை தனியே விட்டு சென்றது ஏனோ ? உன்னில் மட்டுமே நான் பகிர்ந்த எண்ணங்கள் அதிகம் அதே போல தான் நீயும் .. சொல்லிய வண்ணம் நீ மண்ணாகி போனாய் எங்களை தவிக்க விட்டது போனதேன் ... நீ இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னால் கூட உன்னுடன் பேசினேனே அப்பொழுது கூட நான் உணரவில்லை நீ என்னிடம் மட்டுமே கூறியதை ... எங்களை காக்க அண்ணியை கொடுத்து விட்டு சென்று விட்டாய் உன் மனம் விருப்பத்துடன் ... உன் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளும் நானறிவேன் உன் அன்பால் உருவான நான் நிறைவேற்றுவேன் நீ விரும்பியவண்ணம் .. நீ மண்ணாகி போவதை பார்த்து கொண்டு மட்டுமே இருந்த இந்த பாவியின் உயிர் எண்ணங்கள் உன்னை சுற்றி கொண்டே இருக்கும் என்பதை நீயே அறிவாய் . ------------------------------------------------------------------------ எல்லாமுமாக என்னுள் கலந்த என் சரோஜம்மா நீ இல்லாத ஒரு நாள் வருமென நான் எதிர்பார்க்கவில்லை ... உறவுகளின் வலிமையை இழப்புகளின் மூலம் ...