இணைத்து கொண்டே.

வேட்கையின் தீவரம் இன்னுமும் முடிந்த நிலையில் இல்லை அதற்குள்ளாகவே அடுத்த பசியில் உன் நம்பிக்கை விதைக்கப்படுகிறது . பார்வையின் பகை கூச செய்கிறது தேடுதலான வாழ்வில் நிறைவை கொண்டு உருவாக்கிய பொருள் என்றுமே இருந்ததில்லை . கனிந்து பேசும் மொழி கூட செவி கொண்டு அறிந்திருக்கவில்லை வயிறு கொண்டே கொண்டாடுகிறது . மீதம் என்றே பேச்சை இது வரை கேட்டிருக்கவில்லை இருக்கிறது என்னவோ பசி தான் . இறுதியில் தடையின் மீது செலுத்தப்படும் குற்றம் முயற்சியாகவே கருத வேண்டியிருக்கிறது இன்று வரை செய்து வந்தவையும் அவையாவே நிர்பந்தத்தில் மேலும் மேலும் தன் ஒளியை கூட்டுகிறது பசியையும் இணைத்து கொண்டே . -தி .ராஜேஷ் .