முற்றும்.
இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை http://puthu.thinnai.com/?p=4638 முன் பெற்ற காலமொன்றில் தன் நிலையினை அளவிடுவதற்கு தூற்றும் நினைவினை கொண்டு எடுத்து ஆளும் நிறைவு உண்டு . முதல் அன்பின் வீச்சு பார்வையை கூச செய்த தன்மை இனி வருவதற்கில்லை இயங்காமல் போன காலமொன்றில் சேகரித்து வைக்கிறேன் முதலின் அனைத்தும் . இங்கு தான் முதன் முதலாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய தன் சுய விருப்பங்கள் . நீள்கின்ற அவைகளை சுய தொன்மை சுருக்கி விட்டது பல மாலை பொழுதின் கண்ணீரோடு . இன்றளவும் நினைவின் வடுவும் உறுதி செய்கிறது அவையை. யாரும் பார்த்திராத துரோக மவுனத்தின் அணைப்பில் புகலிடம் எய்தினேன் . இங்கு தான் முதல் அகமகிழ்வையும் ,அகதுயரத்தையும் கடந்தேன் . மறுப்பதற்கு மறத்தல் ஒன்றே இன்னும் மன்னித்து கொண்டிருக்கிறது...