மகா இயக்கத்தின் சிறு நினைவு சிதறல்கள்.
இந்த வாரம் உயிரோசையில் வெளியான எனது முப்பத்தி ஆறாம் கவிதை. http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6196 தன் இயக்க சுழலில் எத்தனை விதமாக மறுதலித்து கொண்டிருக்கிறது ஒப்பற்ற மனம் . எதிலும் தன் அடக்குமுறையில் மவுன சிறகுகளை முறித்து கொண்டிருந்தேன் உணர்தலின் வலி பெருவெளி எங்கும் நிறைந்து கொண்டிருக்கிறது . இதில் தன் நுண்ணிய பகிர்வு எண்ணுதலை விட மிகு நுண்ணிய தன்மை கொண்டது . அதில் ஓர் மவுன இடைவெளியை பிரபஞ்ச அலையின் இயக்கமாய் மவுன சிறகுகளை விடுவிக்க முயல்கிறது . சில அனுமானத்தின் நிழலில் இரவை உற்றுநோக்கி கொண்டிருக்க அசைவுறும் பிரபஞ்ச நிழல் தன்னின் பிரதிபலிப்பை எங்கு கொண்டு சேகரித்து கொண்டிருக்கிறது . இங்கு பெற்றுக்கொண்டவையில் தொன்மையின் ஒளிர் சிதற தன் பிம்பம் எதன் எதிரொளி . மேலும் காத்திரு அகாலம் தன் வினையை என்னென்றும் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் . ------ தன் நினைவுகள் உன் காலத்...