நாமாவோம்

தீண்டப்படாத எந்த நினைவையும் விட்டு வைக்கவில்லை இனி தவிப்புகளை புரிந்து கொள்கின்ற ஒரே மொழி நம் மவுனம் மட்டுமே . அதிகப்படியான எதிர்ப்பார்ப்புகள் தினமும் வந்து சேர்ந்து விடுகிறது ஒன்றுபடும் நம் நேசத்தில் என் தவறுகளும் பொய்மையும் உன்னிடம் மேன்மையடையக்கூடும் . என் வரையறையில் உன்னை காண்பது விட உன் வரைமுறையில் நம் வாழ்வை காண்போம் கற்பனையில் சொல்வதாக எண்ணி விட கூடும் ஆதலால் நூற்றில் நானோவின் ஒரு பகுதியை எழுதி விடுகிறேன் மன்னிப்பாயாக . நம் தேடல்கள் இனி நாமாவோம் பெருகி கொள்கின்ற விருப்பம் பொருந்தும் மனமாகும். இன்று வரை நீ யாரென்று தெரியவில்லை நாளை வரை காத்திருக்க வைக்க வேண்டுமா முதல் முறையாக நியாயப்படுத்தி கொள்கிறது பல நிலைகளுடைய தன் விருப்பங்கள் . -தி .ராஜேஷ்