தவறுகள்.
என் தவறுகள் எங்கும் எப்பொழுதும் மறைத்து வைக்கப்படுவதில்லை அது எங்கு எவ்வாறு நடந்ததோ அவ்விதமாகவே இன்னும் உலவி கொண்டு தான் திரிகிறது . நாளும் வளர்கின்ற இவை என் வருகைக்காக மீண்டும் காத்திருக்கிறது. தலைகுனியும் குற்றணர்வு இங்கு கண்டிப்பாக நியாயமாக்கவில்லை. வழக்கம் போல உன் கணமேற்றும் நொடிகளின் மவுனம் இது வரை அறிந்து வைத்துள்ள உறவின் புரிதல் மேலும் ஆழப்படுத்துகிறது . தவறை தவறாகவே பார்க்கும் வரையில் தவறு நிகழ்ந்துவிடுகிறது ஒவ்வொருமுறையும். ஒரு தவறு எப்பொழுது தவறாகிறது தவறாக்கப்படுகிறது தவறின்மையாக இருக்க ஒரு செயல்பாடும் என்னில் இதுவரை உருவாக்கப்படவில்லை . இயன்றவரை தவறை ஒத்து கொண்டுள்ளேன் மன்னிப்பதற்கும் என்னிடம் ஒன்றுமில்லை . என் தவறுக்கு நியாயங்கள் என்றுமே இருந்ததில்லை சந்தர்ப்பம் மட்டுமே இதில் மேலோங்குகிறது .. உன் வெறுப்பின் நிலையை இப்பொழுது நான் உணர தேவையில்லை...