நம்பிக்கை .
இப்பொழுதைய என் இருப்பு பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு அணுவிலும் இருப்பதற்கான சாத்தியங்கள் அனைத்தும் இருக்கிறது நீங்கள் செய்ய வேண்டியது அதனை நம்புவது ஒன்றே . நம்புவது என்பது நம்பிக்கையின் மீது அமர்த்திவைக்கப்பட்ட வைக்கப்படும் ஒன்றையோ பலவற்றையோ அல்லது இதுவரை தோன்றிய அனைத்துக்குமான நம்பிக்கையை குறிப்பது . அப்படிப்பட்ட ஒன்று இருக்கவே செய்கிறது அதையும் நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும் . என் வாழ்வு கொடுக்கப்பட்ட முறையினை சார்ந்தது அல்ல ஒரு இயக்கத்தால் அளிக்கப்பட்ட மற்றொரு இயக்கம் . ஏற்று கொள்ளபட்ட உண்மையை நம்புவது காரணமின்றி நிராகரிப்பது என் முறையானது அல்ல . எதிர் வரும் இறுதி இன்றோ நாளையோ முடிவிலியாக இருக்க ஒன்றும் செய்ய போவதில்லை நான் நம்பும் நம்பிக்கையை நம்பவது ஒன்றே அனைத்துக்கும் சாத்தியப்படும் நம்பிக்கையாகிறது. என் சில பகிர்வுகள் சுய மனதை ஒளித்துவைக்க பயன்படுகிறது . அத...