அன்பின் நிலை

குற்றமிழைத்த அன்பின் மிகுதியை எதனினும் கொண்டும் ஏற்புடையாகாது பரிதவிக்கும் மவுனத்தின் இடப்பெயர்ச்சி மன வலி கொண்டு வளர்த்தெடுக்கிறது அதனதன் தனிமை . இதுவரையில் என்னிடம் உருவாகியிராத புன்னைகையும் கண்ணீரையும் நேசங்களில் வளப்படுத்திய முக்காலமும் தூற்றி கொண்டிருக்கிறது என் செயலை அதன் நம்பிக்கையில் தோற்றி கொண்டிருக்கிறது என் கொடூர புன்னகையும் கண்ணீரும் . புற நோக்குதல் யார்க்கும் அறிந்தவையே அதன் சந்தேகத்தின் பரவல் மிகைப்படுத்த செயலும் பொய்யும் நுட்ப பெரு வெளியில் நொடிகளின் இயக்கத்தில் மிதந்து கொண்டிருக்கிறது . இப்பொழுதைய நீள்கின்ற நெஞ்சத்தின் மன அலறல் மவுனத்தை சேதமாக்கியது மன விடை பெறுகின்ற அனைத்திலும் முதல் நேசிப்பின் விதை உன்னிடமே விருட்சமாகும் . உந்தன் நிலையை போல எந்நிலையும் அமைந்திருக்க சற்று கூடுதலான பரிதவிப்பில் நம் நிறைவேறாத கனவினை விடிய செய்கிறது புதிய பிரபஞ்சம் . அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி கொள்ள கூடியதாக அமைந்த...