நிழல். -உயிரோசை.
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=4892 நஞ்சு உட்கொண்டிருந்த நிழலொன்று இந்த பகல் பொழுதை உற்று நோக்குகிறது . அவை தன் இரவின் மீதங்களை செயலிழக்க செய்வதில் முனைப்பாகிறது . நிழல் அசைவுகள் இப்பொழுது உயிர் கொண்டிருக்கிறது . நெருங்கும் இறுதி அந்நிழலே தீர்மானிக்க வேண்டியிருக்கிறது . எளிதாக கடந்து விடும் எப்பொழுதுமான நிழல் இவையில்லை பிறப்பிக்கப்பட்ட வன்மம் நிறைந்திருக்கிறது . நஞ்சின் நிழல் தன் உருவம் கொண்டு தீண்டியது மெல்ல படரும் நஞ்சு உருகி கொண்டிருக்கிறது . பகல் இரவினையும் உருவாக்கி விட்டது . கைவிடப்பட்ட நிழல் சுய ஒளியினை நம்பி இருப்பதில்லை . வளத்தூர் தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள...