சென்னையில் நான் -1
சென்னைக்கும் எனக்குமான உறவு எனக்கான முரண்பாடுகளின் தொடக்கமாய் அமைந்தது என் சென்னை பயணம். வீட்டில் இருந்து ஓடி போவது என்று முடிவாகி விட்டது என் உறவினர் தரணி அக்கா திருமணம் திருவள்ளூரில் நடை பெற இருந்தது அதையே களமாக்கி கொண்டேன் . அத்திருமணத்தில் என் முடிவை என் அண்ணன் கார்த்தியிடம் சொன்னேன் . அவன் படப்பையில் உள்ள தன் நண்பன் சரவணனிடம் அழைத்து சென்றான் அங்கு எதையாவது வேலை வாங்கி தரும் படி சொன்னான் அங்கு தற்சமயம் வேலை இல்லை ஒரு வாரம் கடந்து பின் தன் மற்றொரு நண்பனான மணிவண்ணனிடம் அழைத்து சென்று ஒப்படைத்தான். நீலாங்கரையில் என் சென்னை வாழ்வு தொடங்கியது . சென்னையில் வேலை பார்த்த முதல் இடம் முரளி மிசின் வொர்க்ஸ் நீலாங்கரை நகர வசிப்புக்கு புதியது என்பதால் ஒரு வித மிரட்சியுடனே அனைத்துமே அணுகினேன்.ஒன்றரை வருடம் அங்கயே வேலை பார்த்து கொண்டிருந்தேன் .+ 2 தோல்வி அடைந்திருப்பதால் 500 ரூபாய் சம்பளம் வீட்டிருக்கும் எனக்குமான கடிதப்போக்குவரத்து மணி ஆர்டர் மட்டுமே .நைட் சிப்ட் இருந்ததால் மாதம் ஆயிரம் பெற்று வந்தேன் .அடுத்த வேலை சேருவதற்குள் மாதம் இரண்டாயிம் பெற்று வந்தேன்...