உறைந்த நினைவுகளில்
என் இருப்பின் பதிவு கூடுமானவரை நிகழ்வின் உறைவிடமாகவே உறைந்து போய்விட்டன வீடு இனி உறைந்த நினைவுகளில் கரைகிறது நிகழ்வுகள் . பிறப்பின் நுழைவு வருவதற்கு முன்பாகவே முழுமையடைந்த நிர்பந்தங்கள் ஒவ்வொன்றாக விளைவிக்கப்பட்டன அதன் காட்சியமைவு நீங்கள் நம்பும் அளவிற்கு நம்பிக்கையாகிறது இப்பொழுது சினத்தின் அச்சம் உள்ளார்ந்த நெறியாகி நிலைத்திருப்பதை உங்களால் இனி வேடிக்கை மட்டுமே பார்க்க இயலும் . வீட்டின் அமைவை கூடுமானவரை உங்கள் விருப்பத்தில் நிறைவேறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள் ஏன்னெனில் தூக்கி வீசப்பட்ட பல கனவுகளின் மிச்சம் இதிலும் ஒளிரக்கூடும் . மகிழ்வின் துயரத்தை நீங்கள் அறிந்திராத இந்த வீட்டின் வெற்றிடத்தில் சேமிக்கப்படுகிறது அவ்வாறான ஒன்றை நீங்கள் பல நாட்களாக மறந்து மறைத்து போனதை சில இருப்பு உங்கள் கண்கள் மீது நீர்மமாக காட்டி கொடுத்து விடுகிறது . என் சுயத்தின் சில பரிணாமத்தின் இறு...