என் ஆயா சரோஜாம்மா -2

எல்லாமுமான என் ஆயா சரோஜாம்மா அன்பாய் என்னென்றும் என்னுள் இருந்து வழிகாட்டுகிறார் .ஆயா பிறந்தது பழைய வாணியம்பாடியில் இவர் கூட பிறந்த ஒரே அண்ணன் சபாபதி என்ற கண்ணாடி தாத்தா..என் ஆயாவின் அம்மா ஊரும் வளத்தூர்ரே தன் உறவினரான வளத்தூர் தா.பா.கிருஷ்னமூர்த்தி அவர்களை மனம் புரிந்து வளத்தூர் வந்தடைந்தார் என் ஆயா .என் தாத்தா என் அப்பாவின் திருமணத்திற்கு முன்பே இறந்து விட்டதால் அவரை பற்றி நான் அறியாமலே போனேன் .ஆனால் எங்கள் ஊரில் அனைவரும் தாத்தா பற்றி பெருமையாக சொல்ல கேட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் இன்றும் கூட இது தோடர்கிறது ...பிரதிபலன் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்தது எப்பொழுதும் தொடரவே செய்கிறது சுயநலமற்ற அன்பு எப்பொழுதும் உங்களை சுற்றி இருக்கும் சூழ்நிலை ஆகிறது அதுபோல என் தாத்தாவின் மூலம் அவர்கள் பேரன் ஆன என்னையும் தோடர்கிறது .ஊர் மக்கள் அனைவரும் கிருஷ்டப்பா பேரன் என்றே அடையாளப்படுத்த பட்டிருக்கிறேன் சிறுவயது முதலே ஆயாவும் தாத்தா பற்றி நிறைய சொல்லி இருக்கிறார் அதை வேறு ஒரு நிகழ்ச்சியுடன் எழுதுகிறேன் ..என் ஆயா திருமணம் செய்யும் பொழுது தாத்தாவின் வயதை விட ஒரு வய...