என்னவள்

என்னவளுக்கான என் அறிமுகம் எப்படியிருக்கும் இதில் எவையெல்லாம் என்னை நிறைவு செய்ய வேண்டும் என்ற வரையறை அவளிடமே தந்துவிட வேண்டும் எங்கள் முதல் சந்திப்பு அவர்கள் வீட்டில் எங்கள் சுற்றத்தாருடன் நடக்கலாம் . என் முதல் காதலும் அதன் கடிதங்களும் பகிர அவள் சம்மதிப்பாளா அவளின் உலகத்தில் என் பிரபஞ்சத்தை இணைய விரும்புவாளா என் முதல் கண்ணீரை பாதுகாப்பது போல அவளும் அதை செய்திருப்பாளா அவளின் வரைமுறையில் சிறிதேனும் நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது என் திணிப்பை அவள் எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும் என மேலும் பல அறிவுரையை சொல்லி அவளை சிறிது மகிழ செய்ய கூடும் .. பகிர்ந்து கொள்ள எங்கள் பிரபஞ்ச அன்பு இருக்கிறது இது ஒன்றே போதுமானது என் முதல் எதிர்ப்பார்ப்பு அவளின் முதல் அகமகிழ்வை என்னால் பெற்றிருக்க வேண்டும் என்பதே . -தி .ராஜேஷ்...