வலிகளின் நிலையில்லா தன்மை.

மிகவும் எளிதாக அனைவரும் உணரக்கூடிய வலியொன்று அழுத்தத்தின் இயல்பை மீறப்படும் செயலாய் என்னால் இயற்றப்பட்டது நேற்று . என் இயக்கங்களின் வழிந்தோடும் பிரபஞ்ச நேசங்களை எடுத்துக்காட்டாய் விபத்தொன்று இனிதே நடந்தது . சில விபத்துகள் ஏற்படும் பொழுது பழியை எளிதாக சுமத்த அமைகிறது தன் கவன குறைவு . பரவுகின்ற எரிச்சல் உடலின் வலிகளை பற்றிக்கொண்டு பழைய வன்மங்களை நினைவூட்டுகிறது . பிதற்றப்படும் வலி முனங்கள் ஆயா,அம்மா ,அப்பா தாண்டி பிரபஞ்ச எண்ணத்தில் ஒன்றிணைத்தது . நட்பின் துணையை ஹரிஹரன் மெய்ப்பித்தான் விழியோடு பேசும் நம்பிக்கை வார்த்தைகளை வலிகளின் மீது தூவினான் . துடித்த மனதின் முதல் தேடல் என் ஆயாவாக இருப்பதில் இருப்பின் விதையில் ஆறுதல் அடைய செய்தது . காயத்தின் வலிகளின் மீது எப்பொழுதும் நிலையில்லா தன்மை ஊடுருவுகிறது . பிரபஞ்ச உணர்வு உறவினர்கள...