அண்ணன் தி .கார்த்தி

சிறுவயது முதலே ஒவ்வொரு வருடமும் இன்றைய நாளை புத்துணர்ச்சியாக மகிழ்வின் உச்சமாக இருப்பதாக நம்புகிறேன் இன்றும் அப்படியே . என் அன்பு அண்ணன் தி .கார்த்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உன் அனைத்து எண்ணங்களும் வெற்றி பெற வாழ்த்துகள் . நம் வீட்டின் முதல் மகிழ்வை எங்கும் நிரப்பிய தடம் எங்கும் உள்ளது . இன்றும் நிரம்புகிறது வருகின்ற அன்பும் இதையே நிரூபிக்க உள்ளதால் நீயொரு வழிகாட்டும் விருட்சம். பல தடைகளை தாண்டி நீ கல்வி பயில அறிவின் பரிணாமம் விரிவடைய ஆயாவின் நேசமும் வாழ்த்தும் முதலாக என்றுமே இருக்கும் . நானும் தம்பியும் அண்ணாவென்று உன் எதிரில் இது வரை அழைத்ததில்லை அதற்கான எண்ணமும் தோன்றியதில்லை அன்பினை என்ன பெயரிட்டு எப்படி அழைத்தால் தான் என்ன? நாம் மூவருமே அவ்வாறே வளர்ந்தோம் . நம்மின் பிணைப்பை அன்றைய சிறுவயதின் வாழ்விலே நின்று விட்டதாக வாலிப வயதில் தோன்ற அவ்வபொழுது மாயத்தோற்றம் என்னை ஆட...