உள்ளொளி

முன் நொடியில் இருள் கொண்ட அறையில் சுடர் அசைவில் நானும் நிழலும் நிறைந்து கொண்டிருந்தோம் . பின் நொடியில் அண்டம் உமிழ்ந்த ஒளியில் நானும் நிழலும் பெருவெளியின் இருப்பைக் கொண்டு அலைந்து கொண்டிருந்தோம் . முன்னும் பின்னும் நிழலுக்கு நான் என்றைக்கும் தேவையாய் இருக்கவில்லை . அதுவும் உள்ளொளிக்கு . -வளத்தூர் தி.ராஜேஷ்