மவுன புன்னகை

விடியலின் தொலைவை இன்னும் நெருங்கியிருக்கவில்லை அதற்குள்ளாகவே உன் சிணுங்கள் மொழியினை பின்பற்றி ஒலிகளின் கோர்வையாக பூக்கள் மலர்கிறது அதன் ஓசைகள் உன் மகிழ்வை ஒத்திருக்கிறது . இவையாவும் எனக்கும் தான் பொருந்துகிறது !!! என்ன செய்வது உலகில் உள்ள மலர்கள் அனைத்தும் உன் விதையினை தூவி இருக்கிறாய் என்று கனவில் சொன்னாயே அதை என் நம்பிக்கையாகி கொள்வதை விட உன் நம்பிக்கையை உறுதி செய்யவே நம் மகிழ்வை ஒவ்வொரு மலரிலும் காண்கிறேன் . வாடிய மலரினை நீ கனவிலும் கண்டு கொள்வதில்லை அதன் வருத்தம் எனக்கு இருந்தாலும் அம்மலரை போல் நானும் மவுனத்தில் சிரிக்கிறேன் அதையும் ரசிக்கிறாய் ஒரு மலரை பார்பதை போல் . அப்பொழுது நீ ரசித்தது வாடிய மலரென்று நீயும் உணரவில்லை அந்த பூவும் அறியவில்லை என் மவுன புன்னகை மட்டுமே அறிந்திருந்தது . ...