என் ஆயா சரோஜாம்மா -1

எல்லாமுமாக என்னுள் இருந்து இயங்கும் என் ஆயா சரோஜாம்மாவின் இருப்பு நிலை எப்பொழுது என்னில் இருந்து தொடங்கியது என்று ஒரு நினைவு பயணமாக என்னுளே பயணிக்கிறேன்.என் தனிமையில் எனக்கு துணையாய் எப்பொழுதும் இருப்பது சிறு வயது முதலே நான் நேசிக்கும் என் பிரபஞ்சமும் அதன் எண்ணங்களும் என் ஆயாவுமே . நினைவின் உள்ளவரை ஐந்து வயது வரை என் ஆயா சரோஜாம்மவிடம் நெருக்கம் அதிகமாக இருந்தது இல்லை என் ஆயாவின் மாமியார் ருக்குமணி என்ற ருக்காயா மட்டுமே அதிகமான பாசமாக இருந்து உள்ளேன் காரணம் அவர்கள் கதை சொல்லவார்கள் தின்பதற்கும் எதையாவது கொடுப்பார்கள் ..அவர்கள் கதை சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது இன்று அந்த கதைகள் நினைவில் இல்லை என்றாலும் அந்த கதாபாத்திரங்கள் அவ்வபொழுது இன்றும் கானல் நீராக வந்து வந்து செல்கிறது .எங்கள் வீட்டில் பூஜை அறையில் நான் ,அண்ணன் ,தம்பி உறவினர்களின் சம வயது குழந்தைகள் அனைவரும் விளையாடி விட்டு கதை கேட்க கூடுவோம் ஆர்வமாகவே கேட்போம் எங்கள் மத்தியில் சில சில பேச்சுக்கள் எழும் பொழுது அமைதியாகி விடுவார்கள் ..ஒவ்வொரு வாக்கியத்திலும் இடைவெ...