இன்று கொடுக்கப்பட்ட என் தினம் எவ்விதம் கழிந்தது ஒரு முன்னோட்டமாய் நினைவின் அசைவில் ஏற்றப்படுகிறது . முதல் யோசனையில் பத்து நிமிடம் கழிந்தது பிறகும் தொடர்கிறது நேரங்களின் இயக்கம் . பல புன்னைகையை புரிந்திருக்கலாம் அதை கவனிக்க நானும் நீங்களும் மறந்திருக்கலாம் .. சில கோபங்களை மிக எளிமையாக கையாண்டு இருக்கலாம் நானும் நீங்களும் மறைக்க வாய்ப்பில்லாமல் ஏற்று கொண்டிருக்கலாம் . நீங்கள் அறிந்திராத கணத்தில் என் மனதின் கண்ணிர் ஆவியாகி போயிருக்கலாம் .. சிறுது வேலை செய்து இருக்கலாம் என நீங்கள் நம்பும் காரணங்கள் கிடைத்திருக்கலாம் .. தினமும் முழுமையாக உணவு உண்பவனாக உங்களுக்கு இன்றும் காட்சியளித்திருக்கலாம். திடிரென தோன்றும் இயலாமையின் ஆளுமை மீண்டும் நீள்கிறது . வெறுமையும் தனிமையும் நான் கருதி கொண்டிருக்கும் அமைதியை மேலும் தனித்து விட போக போகிறது நானும் நீங்களும் அதன் ஊடே சி...