பிரபஞ்ச ரகசியம் -திண்ணை,
திண்ணையில் வெளியாகும் எனது இருபத்தி ஐந்தாவது கவிதை நண்பர்கள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள் . http://puthu.thinnai.com/?p=4265 மனம் தோன்றா காலத்தில் என்னிடம் பறிக்கப்பட்டுவிட்டது பிரபஞ்ச ரகசியம் . அதன் பிறகே பரிணாமம் அடைய விட்டிருக்கிறது காலம் . காண்கின்ற யாவற்றிலும் ரகசியங்களாக மாறுகிறது சுய தேடல்கள் . இந்த உயிரின் இறுதியும் இவ்வாறே இருக்க உலவ விட்டிருக்கிறது அந்த ரகசியம் . இதன் முறையே பிறப்பிக்கப்பட்ட ஒரு கட்டளை உணர்வதற்குள் ஒவ்வொரு செயலின் அறியாமை கடந்து விடுகிறது . பிரபஞ்ச எண்ணங்கள் அனைத்துமே உனதாக்கினேன் அதுவே அகமகிழ்வு என்றே வளர்ந்தேன் உணர்ந்த பின் உன்னில் நான் இருப்பதை என்னில் கொண்டு வர முடிவிலி கொண்டே அனைத்தையும் நோக்குகிறேன் இதில் தவற விடப்படும்...