பொருள் சேர்

பொருள் சேர்க்கும் கூட்டத்தில் ஓய்ந்திருப்பது இழிவின் செயலாகவே பார்க்கப்படுகிறது . தவறுகளின் மொத்த உருவகமும் இதன் மீதே சேர்க்கப்படுகிறது . மனதின் வாழ்வை கேலிக்குரியதாக மாற்றுகிறது பொருள் சேர் உலகம் . பொருளின் இருப்பை பதிவு செய்வது உயிரினத்தின் மதிப்பை கூட்டுவது வெறும் கானல் நீர் மட்டுமே . அதற்கான அவசியமும் திணிக்கப்பட்ட நிர்பந்தமும் இன்னும் என்னை அண்டாமல் இருப்பதே எந்தன் இயக்கமாகிறது. நிறைவை தருகின்ற அந்த நிமிடங்களை என் படிமத்தின் நிற மாற்றங்களை இறுதி வரை மற்றவர்கள் உணராமல் இருப்பதே எனக்கான முக்கியத்துவத்தை வலுவாக்குகிறது . -வளத்தூர் தி.ராஜேஷ் .