பிரபஞ்ச பகிர்வுகள்
எதையும் இன்னும் சொல்லி முடிக்கப்படவில்லை நிகழ்வின் மீதங்கள் மட்டுமே இப்பொழுது நிகழ்த்தப்படுகிறது . உங்களால் வேறொரு விதமாக மீண்டும் மீண்டும் நிகழ்வு மாற்றியமைக்கப்படுகிறது இக்கணம் . புரிந்து கொள்வதற்கு ஏதுமில்லை உணர்வதற்கும் எல்லை இல்லை . இப்படியும் என் அமைதியை தேடி கொள்வதில் உணர்த்தப்பட்ட பிரபஞ்ச மவுனத்தை அகமாக மாற்றி கொண்டு என் வார்த்தைகளை இவ்வளவு அடுக்கி வைப்பதில் எனக்கான இப்பொழுதைய இருப்பை வழங்கி உள்ளது காலம் . ---------------------------------------------------------------------- அன்றே குறிப்பெடுக்க நம்மை வடிவமைக்கும் சொல் கிடைக்கவில்லை இன்று கிடைத்துவிட்டதாக நம்பும் காராணிகள் இரவையும் பகலையும் விட்டுவைக்காமல் பெருவெளியில் தேடி கொண்டிருக்கிறது . உன் அகமகிழ்வின் பிரபஞ்சத்தில் அவை நிறைவு பெற்றதாக மிகுந்து இருக்கிறது . இதனை கடைசி வரை சொல்ல போவதில்லை என்று உறுதியெடுக்கும் முன்பாகவே அதனை உடைத்தெறிந்தாய் அன்பே . ----------------------...