கருத்தின் வாழ்த்துகள்

தன்னை ஏற்றுகொள்ளும் ஒரு கருத்தை இது வரை அறிந்திருக்கவில்லை காலம் அதன் மாற்றத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையை அடைந்திருக்க நூற்றாண்டின் விளைவை உயிரினத்தில் புகுத்தும் உண்மையான ஒன்று இன்னும் உருவாகியிருக்கவில்லை . கருத்தின் செறிவு தன் ஆளுமைக்கு உட்பட்டதாகவே இன்று வரையிலும் பின்பற்றப்படுகிறது . நிர்பந்தம் ஏன் உங்களை சிந்திக்கவைக்கவில்லை ஒரு வேளை பின்பற்றபட்டவையே இறுதி என உங்களை நம்ப செய்யும் சூழ்ச்சியில் உறங்கி உறைந்து போய்விட்டிர்களா எதுவாயினும் நிகழ்த்தி கொண்டிருப்பவை உங்களால் நிர்ணியம் செய்ய கூடியவை அல்ல . கருத்தில் உங்கள் சாதகங்களை முதலில் தேடுகிறிர்கள் அவ்வாறு இல்லையெனில் எளிதாக புறகணிக்க முடிகிறது கருத்தின் நம்பிக்கை எதுவரை வரையறுக்கப்படுகிறது என சந்தேகம் உங்களுக்கு இது வரை வந்திருக்க வாய்ப்பில்லை . ஒரு வேளை என் பிதற்றல் அறிந்திருக்குமோ என்னவோ எனக்கான கருத்தில் உங்களை நிச்சையமாக காண இயலாது அந்த கருத்தின் இயலாமையில் தொற்றி கொண்டிருக்கலாம் அப்பொழுதும்...