நெருங்குதலில்.

கண்களை திறப்பதற்குள்ளாகவே ஊடுருவம் காட்சியகிறாய் நீ யாரென்று அறியாத உன்னை எந்த வரையரையிலும் வளர்த்து கொள்வதை நான் எண்ணவில்லை . உன் எண்ணங்களும் என் செயல்களும் இனி என்றென்றும் நம் வாழ்வு . சொல்ல போகின்ற அன்பின் வார்த்தையை நீயும் நானும் மட்டுமே அறிந்திருப்போம் ஒன்றுபடும் நம் பதிலில் நம் கேள்விகள் வெட்கத்தில் மேலும் சிவந்து தான் போகிறது அப்பொழுது தோன்றுகிற நிழலில் நாம் மெதுவாக மறைய தொடங்கினோம் திரும்பவும் வர மனமில்லாமல் அங்கேயே உலவி கொண்டிருப்போம் எல்லையற்று நீள்கின்ற நம் நெருங்குதலில் . - தி .ராஜேஷ் .