நாளை ?-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது கவிதை http://puthu.thinnai.com/?p=3439 காத்திருக்கும் இறுதி கொண்ட வாழ்வை மற்றவர்கள் தீர்மானிக்க என் பிறப்பின் உறுதி இருள் கொண்ட ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள் கட்டளை இடும் முன்னரே மறுத்துவிடுகிறது சுய ஒளி. அதன் நிறப்பிரிகை கவன சிதறலாகிறது. கணமேற்றும் நாட்களை என் பருவங்கள் கூட அறிந்திருக்கவில்லை . குற்றசாட்டின் உண்மை குற்றங்களில் ஒருபோதும் இருந்ததில்லை சட்டங்கள் இயற்றும் மேதமையில் இருக்கபோவதில்லை மனிதம் மறக்க செய்யும் மனித நேயத்தில் மலிந்து கிடக்கிறது . மக்களின் பெருங்கூட்டம் இரைச்சலின் மிகுதி வருத்தம் கொள்ளும் அன்பின் பரிதவிப்பு யாவும் என்னை சேர்வதற்கு முன்பாக நாளை ஒன்று இருக்க வேண்டுமே ? உன்னை போல பகை கொண்ட வன்மம் இருந்ததில்லை . உடல் மீது அமர்ந்திருக்கும் கொசுவை விரட்டுவதி...