நிறைவுதன்மையற்ற பகிர்வு .

தவறுதலாக பின் தொடரும் ஒரு நிழலொன்று இந்த இரவில் என்னிடம் வந்தடைந்தது . என்னுடையது அல்ல இருந்தும் யாவற்றையும் நேசிப்பதால் அவை மேலும் சில நிமடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்த நீள்கின்ற மவுன அசைவுகள் சற்று அமைதியாகியது. நீடிக்கின்ற என் இரவில் வந்திருக்கும் நிழல் ஒளியில் பகிர நிறைவுதன்மையற்ற காரணங்கள் இருந்தும் கடக்கிறது நொடிகளின் இயக்கம் . விடியலின் தொலைவு சற்று நெருங்குகிறது காலம் கரைந்ததில் சொன்ன ஒரே பதில் நீ.......... நான் . மூன்று காலங்கள் கடந்து வந்திருக்கும் தவறுதலான நிழலொன்று இன்று நானானேன் . விடியலின் தேய்மானம் மெல்ல மெல்ல என் மீது படர தவறுதலான நிழலொன்று நிறைவுதன்மையற்ற பகிர்வை தன் சுய நிழலில் கலந்தது . -வளத்தூர் தி.ராஜேஷ் ...