தோன்றலின் இருப்பிடம்.

உறவின் கணத்தலில் இலகுவாகிறது உள்ளம் போதாமல் நிகழ்கிறது நினைவின் இருப்பு நெருங்குகின்ற தவிப்பு சொல்லாமலே செல்கிறது கேட்பதற்கு இல்லாமையால் பகிர்வதற்கு நிறைய இருக்கிறது வீட்டின் ஒவ்வொன்றிலும் நம் பேச்சுக்கள் கேட்பதற்கு காத்திருக்கிறது . யாவும் என் ஆயாவின் தோன்றலின் இருப்பிடம் இல்லாமலே பயணிக்கிறது என் வாழ்வு . - தி .ராஜேஷ்