Posts

Showing posts from December 14, 2010

என் ஆயா சரோஜாம்மா -3

Image
எல்லாமுமான என் ஆயா சரோஜம்மாவின் நினைவுகளை வெறுமென நினைக்கப்படுவது என் அன்பின் தேவைகளை கருதி மட்டுமல்ல என் அப்பா அம்மாவிடம் கூட அதிகம் பேசியதில்லை நெருக்கமாக இருந்ததில்லை சிறு வயது முதற்கொண்டு அன்பை பகிர்தலில் முதன்மையானதாக என்  ஆயாவை மட்டுமே நான் கருத முடியும்.இழப்பின் ஒவ்வொன்று மணி துளியும் இன்று உணருகிறேன் அன்பின் நினைவும் மட்டுமே என்னை ஆக்கிரமிக்கிறது என் உள்ளத்தில் எழும் அழுகுரலை அதிகரித்து கொண்டே இருக்கிறது யாரும் அதை பொருட்படுத்தவே இல்லை என் அப்பா அம்மா மற்றும் சகோதரர்கள் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருமே ...மற்றவர்கள் முன்னால் நான் அப்படி இருப்பதால் என்னை பற்றிய பயம் அவர்களுக்கு அதிகரித்துள்ளது அதை தவிர்க்கவே என் தனிமையின் துணை கொண்டு ஆறுதல் அடைந்து கொள்ள முயற்சி செய்கிறேன் .. என் ஆயாவிற்கு முதல் குழந்தை இறந்து விட்டது அதற்கு பிறகு ஒரு பெண் குழந்தை ,மூன்று ஆண் குழந்தை பிறந்தார்கள் .என் தந்தை மூன்றாவதாக பிறந்தார் ..பிள்ளைகள் அனைவரும் நன்றாக வளர்த்து படிக்கவைத்து உறவினர்களின் தேவைகளை உடனுக்குடன் செய்து வந்தார்.. இப்பொழுது நினைத்து பார்கையில் என் ஆயாவிற்கு கோபம் வந்து ந...