பிரபஞ்சத்தின் நிறைவு

மிச்சம் இருக்கின்ற இந்த நொடியையும் உன் எதிர்காலத்தில் சேகரித்து கொள்கிறாய் என் தவிப்பின் வரையறையை உன் கனவில் கண்டு கொள்வாய் . என் அன்பை எனக்கென்று ஏதும் இல்லாமல் அனைத்தும் உனதாக்கினாய் என் பிரபஞ்சம் மட்டும் நீ ஒன்றும் செய்யாது இருப்பது மேலும் உன் நேசிப்பினை ஆழப்படுத்துகிறது . பிறகு நீயே கனவில் கூறினாய் என் பிரபஞ்சம் நானாக மட்டுமே இருக்கமுடியும் என்று . அப்பொழுதிய என் வெட்கம் உன் பிறப்பிடமானது இப்பொழுது செய்ய வேண்டியது நம் புரிதல் மவுனத்தை எதிர்க்காலத்திலும் தொடர ஆணையிடு. நான் யாரன்று அறியாமலே நீ கனவில் பிதற்றும் வார்த்தையை நம்ப சொல்கிறாயா ? என்று கேள்விகளை எளிதாக சொல்லி விட்டாய் நம் கனவிலும் ஒன்றுப்படும் நம் உணர்வுகளை மித மிஞ்சிய அளவில் சேர்த்து கொண்டாய் அதன் விளைவே உன் கேள்வியானது . இதன் பதிலை நான் கூறுவதை விட நீயே மெய்ப்பிக்கும் நம் நம்பிக்கையை உறுதி செய்வாய் . யாரென்றே அறியாத உன்னையும் உன் நினைவின் வருகையே உள்ளம் கடந்து இந்த பிரபஞ...