மன நீர்மம்.
மன நீர்மம் உதிர்த்தலை கரையேற்றுவாய் நீயே என் தவிப்பினை அறிந்த எல்லாமுமான ஆயா இந்த நிமிடம் வந்து செல். என் உயிர் கணம் அழுத்தி கொண்டிருக்கிறது. மன தொலைவின் வழியெங்கும் நினைவுகளே ஆக்கிரமிக்கிறது . அதில் சில இரக்கமற்றதாக அமைந்து விடுகிறது . காலமொன்றில் விடுவிக்கப்பட்ட இயக்கம் தன் மாறுபாட்டின் பிரதிபலிப்பு அல்ல . என் மன பகிர்வு அனைத்தும் உறைந்து விட்டிருக்கிறது மெல்ல மெல்ல கசியும் எண்ணங்களை உன்னிடமே சேர்த்து கொள் . மன நீர்மம் உதிர்த்தலை கரையேற்றுவாய் நீயே . அடுத்த வாரம் உன் அன்பின் எண்ணங்கள் நிறைவேற போகிறது நீ அருள்வாய் உன் விருப்பபடி ஆயா ஆண்டுகள் செல்வதை நம் பெருங்கனவு உணர்த்துகிறது . உன் இயல்பை மகா விடம் காணுகிறேன் என்னை வழிநடத்த நீயே தேர்ந்தெடுத்தாய். நம் புரிதலை பிரபஞ்ச இயக்கமாகவே உணர்கிறேன் . அனைத்து உறவினர்களும் சூழ என் வாழ்வின் புதிய தொடக்கம் நுழைவில் உன் நினைவுகளே என்னை அமைதியாக்குகிறத...