நோக்குகிறது .
உன் விலகல் தீர்மானத்தில் பழித்து கொண்டிருக்கிறது காலமும் நொடிகளும் . மீண்டும் கிடைக்க பெறாத உனக்காகவே உருவாக்கப்பட்ட பேச்சுக்களும் ,பார்வையும் புன்னகையும், கண்ணீரும் தோன்றலின் இருப்பிடத்தில் உன் முடிவில் சங்கமிக்கிறது . குற்றம் சுமத்த உனக்கான காரணங்கள் எளிதில் கிடைத்து விடுகிறது உன் விளையாட்டின் விபரிதம் நானக்கப்பட்டேன் . வருத்தம் மிஞ்சும் தனிமையை கிடைக்கபெற செய்த உன்னை மறவேன் . உன் பொய்மையில் என் உண்மை காணமல் போக செய்தாய் பழிகளை நான் சுமக்கிறேன் மாறாத அதே நேசிப்பில் முதல் பார்வையும் முதல் ஆசையும் பகிர செய்த அனைத்தும் இனி இரண்டாம்பட்சம் தான் . என் வாழ்க்கை துணைவிக்கு முதல் பிரியங்களை வழங்காமல் செய்த உன் துரோகத்தின் பரிசு இன்னும் அதிகப்படியான சராசரி கணவனாக இருக்க கண்ணீரால் உருவாக்கப்பட்டேன் . என் பரிசுத்த கண்ணீரில் என்னவளின் அன்பை வளர்த்தேடுப்பேன் . உன் மீது குற்றம் சுமத்தி விளக்கம் கேட்கும் நிலைமையில் நானும் இல்லை என் ஆய...