வார்த்தைகளின் தேடல்.

இது வரையிலும் உன்னிடமும் பகிராத வார்த்தைகளை எண்ணத்தின் அக இடப்பெயர்ச்சியில் தேடி கொண்டிருக்கிறேன் . அவையை நீ மிகவும் விரும்ப கூடும் வெறுக்கவும் கூடும் ஏதும் சொல்லாமலும் இருந்து விட கூடும் உன் எல்லா நிறைவையும் உண்டாக்க கூடிய பூரணத்துவம் வாய்ந்த அவ்வார்த்தையை மேலும் தேடி கொண்டிருக்கிறேன் . உன்னை யாரென்றே தெரியாது ஆனாலும் அவ்வார்த்தையை ஓய்வில்லாமல் தேடி கொண்டிருக்கிறேன் உன் வருகைக்காக . மன போராட்டம் எவ்வளவு அசாத்தியமானது என்பதை எளிதல் உணரவைக்கிறது ஒவ்வொரு சுய தேடலிலும் . உன் முதல் அக மகிழ்வை ,நேசங்களை என்னால் நீ பெற வேண்டுமே என்ற உன் அன்பினால் கட்டுண்டு தேடி கொண்டிருக்கிறேன் பல ஒளி ஆண்டுகளை கடந்து . கற்பனையில் அனைத்தும் சாத்தியம் என்றார்கள் ஆனால் அது அப்படி அல்ல அவ்வளவு எளிதானதும் அல்ல கற்பனைகளை கடந்தும் சிந்திக்கிறேன் உனக்காகவே மன விதையில் விதைக்கப்பட்ட அவ்வர்த்தையில் உன்னை கரம் பிடிக்க . கனவில் அவ்வார்த்தைக...