தோல்வியின் அக மவுனம்
வீட்டின் சிதைந்த கனவுகளில் பல இன்னுமும் விடியலை நோக்கி பயணிக்கிறது அவற்றில் ஒன்று என் தோல்வியை சார்ந்தது . இன்று வரைக்கும் அதற்கான வருத்தம் உணரவில்லை என் தவறுகள் ஒளிந்துகொள்ள யாரும் அறியாத ஒரு கொள்கையை காரணமாக்குகிறேன். ஆயாவிடம் என் முதல் அக மவுனத்தை வழங்குகிறேன் நீடித்து கொண்டே பெருகுகிறது . அம்மா அப்பா அதே அக மவுனத்தை என்னிடம் வழங்குகிறார்கள் இங்கு கொடுப்பதை காட்டிலும் பெறுவது கடினமாகிறது . அண்ணனும் தம்பியும் இவ்வாறாகவே தொடர்கிறார்கள் . தோல்வியின் அமைவு இயலாமையை காட்டி கொடுப்பதல்ல நம்பும் நம்பிக்கையை ஈடேற்றுவது என்று யாரும் அறிந்திருக்கவில்லை . நண்பர்களும் சமூகமும் பல இழிவுகளை என் மீது உமிழ தயாராகவே இருந்தனர் . பெற்றிருந்த அக மவுனம் இறுதி வரையில் பாதுகாத்து கொண்டிருந்து . இப்படியான அழகியல் வாய்ந்ததாக...