பிரபஞ்சமும் என் இயக்கமும்
அமைதியின் ஊடே வழிந்து கொண்டிருக்கிறது நிறைவு கொண்ட என் பிரபஞ்ச எண்ணம் அதன் எச்சங்கள் தன் குறியீட்டு கொண்டு விண்மீன்களும் ,நட்சத்திரமும் விதைத்து கொண்டிருக்கிறது பெருவெளி . உன் இயங்குதல் கொண்டு அறிந்தவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை என் இயங்குதலின் தீவீரத்தன்மை எண்ணத்தோன்றலின் காட்சியமைப்பு மட்டுமே என்று . ஒப்பீட்டு உணர்த்தப்படுதலில் உனக்கும் எனக்கும் வேறுப்பாடு இல்லை என்னையும், மற்றவையும் தாங்கி கொண்டு இயக்குகிறாய் நானோ உன்னையும் ,மற்றவையும் நேசித்து கொண்டு இயங்குகிறேன் . உன் இயங்குதல் பெருவெளி அறிந்திருக்கிறதோ இல்லையோ எந்தன் ஒப்பில்லா மன பெருவெளியில் அனைத்துமாக நிறைகிறது அன்பு . என் இயற்றப்படும் ஒரு பிரபஞ்ச நிகழ்வில் நீயும் ஒரு அங்கமாகிறாய் எனதுயிர் பிரபஞ்சமே ....