மனதின் அழைப்பு .

நெடு நேரமாகவே மனதின் அழைப்பை பொருட்படுத்தவில்லை உனக்கும் எனக்கும் அவ்வளவு தொலைவும் இல்லை . ஏற்கனவே எதிர்ப்பார்ப்பில் இருப்பதால் அலட்சியமான பெருமிதம் கொள்வதற்கு எதுவாக நானும் மவுனமாகவே மீண்டுமொரு முறை மனதின் அழைப்பை கூறுகிறேன் . உன் சிறு அசைவில் செவி கூர்மையாகவே இருப்பதை வேடிக்கையாகவே கருதும் எண்ணம் சிறிதும் இல்லை . தற்பொழுதிய அழைப்பு முக்கியத்துவம் இருப்பதாக உணர வைக்க முயற்சிக்கிறது பொருள் இன்றைய நாளைய வாழ்விற்கு அடிதளம் என்றது . பொருள் சார்ந்த அழைப்பு தான் . என்றுமே பொருட்படுத்தாத ஒன்றை ஏற்று கொள்வது எவ்வளவு துன்பமானது பொருள் சேர் என் இயலாமையாக இருப்பது கண்டுபிடித்து விட்டது இந்த அழைப்பு . என் பதற்றம் அதிகரிக்கிறது யாரும் காணா வண்ணம் பழமை வாய்ந்த இயல்பில் தடயம் இன்றி சேர்த்தேன் பொருள் சேர் இயலாமை இனி எனக்கானது அல்ல என உலகிற்கு கூச்சமின்றி அறைகூவல் விடுத்தேன் . தன் பழியின் தீவரம் என் முன்னோர்கள் மீது சுமத்த எனக்...