கூடுமானவரை

மனதிற்கு ஈடு செய்யகூடிய தனிமையை உன் நினைவுகளில் அலங்கரிக்கும் நாட்களாக மாற்றுகின்றாய் . இரவென்றும் பாராமல் நம் தவிப்பின் நோக்குதல் நன்னெறியாகிறது. கூடுமானவரை கற்பனை எது நிஜம் எதுவென அறிய ஒரு அடையாளமாவது தந்து விட்டு போ . இதை போலவே நீயும் ஆவல் கொள்வாயா கவலை கொள்ளாதே நீ என்னை நெருங்கி வருகிறாய் இனி என் வெற்றிடத்தின் விசை பரவும் மெய் தீண்டும் தூண்டலை உனதாக்குகிறாய். - தி .ராஜேஷ் .