கால மாற்றம்

முன்னெப்பொழுதும் உருவாகியிராத கால மாற்றம் நாளாக நாளாக சேர்ந்து கொள்கிறது . வாழ்வின் அடுத்த நிலைக்கு உட்படும் கால மாற்றம் நிகழ்த்தப்படுகிறது. கடந்தவையும் ,பெற்றவையும் மன வலிகளை கால மாற்றத்தினை கொண்டு மறைத்து கொள்கிறேன் . நிகழ்த்திய சாத்திய கூறுகள் மீண்டுமொரு முறை வருவதற்கில்லை. எதிர்ப்படும் அனைத்தும் உந்தன் எண்ணங்களாகவே உருவகமாகுகிறேன் இன்றும் நீ நானாக நான் நீயாக கால மாற்றம் நிறைவேற்றப்படுகிறது . -வளத்தூர் தி.ராஜேஷ்