பிரபஞ்ச ஒப்புமையின் மைக்ரோ வினாடி.
இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை எத்தனை முறை பிழைகளோடு எழுதினாலும் அதனை திருத்தி வெளியிடும் ஆசிரியருக்கு அன்பின் நன்றி . http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6135 இன்னமும் உருவாகியிராத மவுனத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது மன அமைவு . அவையாவும் . சிதறும் தன் பிம்பத்தை ஒளித்து வைக்க இடம் இல்லாமையால் தன் அக மவுனத்தின் வழியே உருமாற்றம் அடைய அதன் வினையின் நிகழ் . தன் பிம்பம் இங்கே வீழ்ந்து கிடைக்கையில் மறு நிலையின் விடியல் மற்றொரு பிரபஞ்சத்தில் தொடர்கிறது . என் நிழலுக்கு உண்டான மவுனத்தின் கணம் என் ஒளியாகி பிரபஞ்ச நகர்வில் நகர்கிறது . பிரபஞ்ச ஒப்புமையில் என் நதி அழைத்துச் செல்லும் இன்னும் பிற காலமிது . முற்றும் என் வினையொன்றில் தன் நதி தொன்மையின் படிமத்தைக் கற்பனையாக்குகிறது. -வளத்தூர் தி .ராஜேஷ் ...