பொருள்-திண்ணை.

இந்த வாரம் திண்ணையில் வெளியான கவிதை 


http://puthu.thinnai.com/?p=7166


பொருள்  கொண்டு 
மனிதம் மதிப்பீடு 
செய்யப்படும் 
வழிமுறையை 
பழக்கப்படுத்தி கொள்வதில் 
இனி சிக்கல் 
இருக்கபோவதில்லை.

மற்றவர்களை 
உதாரணம் கொண்டு 
உருவாக்கப்படவில்லை 
இந்நிலை. 
ஒரு நீடித்த பகலில் 
கைவிடப்பட்ட நம்பிக்கையை 
சுமந்து கொண்டு 
சுய நீர்மம் நிறைவில் 
மனதின் அழுத்தங்களை 
தாங்கி கொள்ள இயலாத நிலையில் 
என்னையும் ஆட்கொண்டது 
நாளை உங்களையும் தான் .

இனி 
உயிரினம் வாழ 
நிர்பந்தங்களை 
பட்டியல் கொண்டு 
மன குற்றங்களை 
மறைத்து மறந்து வாழவே 
உசித்தம் .
அது மிக எளிதான இயல்பு தான் .
                                  -வளத்தூர் தி.ராஜேஷ் 

அன்பின் நன்றிகள் திண்ணை நண்பர்களுக்கு .

Comments

  1. கைவிடப்பட்ட நம்பிக்கையை
    சுமந்து கொண்டு தன்னை உணர்ந்து இயலாமையில் வருகின்ற கண்ணிர் சுய நீர்மம் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி