காலம்-திண்ணை
இந்த வாரம் திண்ணையில் வெளியான எனது இருபதாவது கவிதை :)
மதிப்பிழந்த என்
சுயத்தை
வெறுமென
வேடிக்கை காட்டும்
பொருளாக
மாற்றியமைக்க
இயன்ற வரை
முயல்கிறது
என்னை அறியப்படாத
காலம் ஒன்று .
தன்னை நிருபணம்
செய்வதற்கு
சுயத்தை
ஒன்றுமில்லாமல்
செய்வதை
வேடிக்கை பார்க்கிறது
என்னை
அறிந்து வைத்துள்ள
காலம் ஒன்று .
சுய அங்கீகாரம்
அச்சில்
பெறுவதில் இல்லை
என்பதை
உணர செய்கின்ற
காலம் இன்னும்
தோன்றியிருக்கவில்லை .
காலங்கள்
இணைத்துள்ள
என்னை
பெருவெளி
மட்டுமே
அறியக்கூடிய
சுயத்தை
பெற்றிருக்கிறேன் .
வளத்தூர் தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .
நண்பா, உங்கள் கவிதை எங்களை எல்லோருடைய உள்ள துணுக்களை எட்டி பார்த்தும், தடவி பார்த்தும், சிரித்தும்,அழுதும் செல்கிறது. கவிதை நன்று.
ReplyDeleteஅன்பின் நன்றி நண்பா .
ReplyDelete