விழித்திருப்பவனின் இரவும் பகலும் .
விழித்திருப்பவனின் இரவில்
கனவொன்று வந்து
கொண்டே இருக்கிறது
மீண்டும் மீண்டும்
வந்து போகிறது
அதே கனவொன்று
ஒரே கனவொன்று .
மெல்ல மெல்ல அவனை
உள்ளிழுக்கிறது
கனவொன்று .
பல ஆசைகளை
நிறைவேற்றி கொள்ளலாம்
என நிபந்தனை விதிக்கிறது
கனவொன்று .
பல ஆயிரம் வன்மங்களை
சுய சார்பற்று விதைக்கவும்
நிபந்தனை விதிக்கிறது
கனவொன்று .
நீ நினைப்பதை அனைத்துமே
உருவாக்கி கொள்ளலாம் எனவும்
நிபந்தனை விதிக்கிறது
கனவொன்று .
இறுதியில் இவைகள் அனைத்துமே
கனவென்றே கொள்ளவும் என
விழித்திருப்பவனின் இரவில்
கனவொன்று வந்து
கொண்டே இருக்கிறது
மீண்டும் மீண்டும்
வந்து போகிறது
அதே கனவொன்று
ஒரே கனவொன்று .
விழித்திருப்பவனின் பகலில்
கனவொன்று வந்து
கொண்டே இருக்கிறது
மீண்டும் மீண்டும்
வந்து போகிறது
அதே கனவொன்று
ஒரே கனவொன்று .
மெல்ல மெல்ல அவனை
உள்ளிழுக்கிறது
கனவொன்று .
பல ஆசைகளை
நிறைவேற்றி கொள்ளலாம்
என நிபந்தனை விதிக்கிறது
கனவொன்று .
பல ஆயிரம் வன்மங்களை
சுய சார்பற்று விதைக்கவும்
நிபந்தனை விதிக்கிறது
கனவொன்று .
நீ நினைப்பதை அனைத்துமே
உருவாக்கி கொள்ளலாம் எனவும்
நிபந்தனை விதிக்கிறது
கனவொன்று .
இறுதியில் இவைகள் அனைத்துமே
கனவென்றே கொள்ளவும் என
விழித்திருப்பவனின் பகலில்
கனவொன்று வந்து
கொண்டே இருக்கிறது
மீண்டும் மீண்டும்
வந்து போகிறது
அதே கனவொன்று
ஒரே கனவொன்று .
விழித்திருப்பவனின்
இரவிலும் பகலிலும்
கனவொன்று
இருக்கிறது
அவ்வளவு தான் .
-வளத்தூர் தி .ராஜேஷ் .
Comments
Post a Comment