தன்னை அகற்றப்படுதல்

உங்களை பற்றிய 
மதிப்பீடு 
என்றேனும் 
நீங்கள் 
உங்களுக்கே 
வழங்கி உள்ளிர்களா .

மதிப்பீடு 
மற்றவர்களை எளிதாக 
நாம் சொல்வதை 
செய்வதை நமக்கு நாமே  
செய்வது மிகவும் 
கடுமையான ஒன்று .

முதலில் இதில் 
எவையெல்லாம்  
நம்மை நிராகரிக்க 
போகிறோம் 
என்ற பட்டியல் 
நீள்கிறது .

நம்மை நாமே
புறக்கணிக்கப்படுவது 
இழி செயலை 
காட்டிலும் 
கொடூரமானது தான் .

நிர்பந்தங்கள் 
இயலாமைகள் 
போன்ற பல 
காரணிகள் 
தொகுப்பாக 
சேர்க்கப்படுகிறது .. 
 
மதிப்பீடு ஏன்
இருக்க வேண்டும் 
என 
ஒவ்வாமை எண்ணம் 
தோன்றுகிறது ..

ஒவ்வொன்றின் மீதும் 
அச்சத்தின் கொடுரம் 
நிழலாக பரவ  
எங்கும் சூழ்கின்ற 
வெறுப்பு உமிழ்கிறது  
நான் பழி வாங்கப்படலாம் 
கொல்லப்படலாம்.

பல தொன்மம் 
கடந்து இன்று 
யாரும் அறியாத 
ஒன்றை தடயம் 
இன்றி அகற்றப்படுகிறது 
எந்தன் மதிப்பீட்டில் 
                               தி .ராஜேஷ் .



Comments

Popular posts from this blog

உள்ளொளி