மீட்கப்படும் சந்தேகங்கள்

மீட்கப்படும்  சந்தேகங்கள்
வலுப்படும் பொழுது 
கணத்தின் சூழல் 
உறுதியாகிறது ..

எழுகின்ற கேள்விகளை
பதிலின் இகழ்வை
பொருத்து கொள்வதென 
உரிமை மீறுகிறது ..

பொருளின் முக்கியத்துவம் 
உணர்வை மழுங்கடிக்கும் 
ஆயுதமாகவே கருத 
வேண்டியிருக்கிறது ..

எளிதில் வெட்டுப்படும் 
ரணத்தில் இன்னும் 
குருதி வழிந்தோடுகிறது 
அவை தீர்ந்து போனாலும் 
அணுக்களின் இயக்ககங்கள் 
நீண்டு கொண்டே தான் 
இருக்கிறது ..

                            -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

பிரபஞ்ச கருவின் உயிர்தெழுதல்