கவனிக்கப்படும் பொருளாய்
கவனிக்கப்படும் பொருளாய்
நான் திகழ்கிறேன்
மற்றவர்களால் ..
எத்தனையோ தேடல்களில்
நானும் அவற்றில்
ஒருவனானேன்
மற்றவர்களால் ..
என் சிந்தனையை நான்
சிந்திக்காமல் மற்றவர்களால்
நான் எப்படியெல்லாமோ
சிந்திக்கபடுகிறேன்..
தெரியப்படுகின்ற
அனைத்திலும் என் விருப்பு
வெறுப்புகள் மற்றவர்களால்
தீர்மானிக்கப்படுகின்றன
என்னை கேட்காமலே ..
எப்படியோ நான் இல்லாத
ஒன்றை நானே பார்க்கும்படி
ஆனேன் மற்றவர்களால் .
- தி.ராஜேஷ்
Comments
Post a Comment